
சென்னை மேயரான பிரியா நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற போது சுவாரஸ்யமான தகவல்கள் சிலவற்றை பகிர்ந்து இருக்கிறார். அவர் தெரிவித்ததாவது என் குடும்பத்தினருடன் வெளியே சென்றால் இரவு நேரங்களில் தான் உணவகம் போன்ற இடங்களுக்கு செல்வோம். எனக்கு தேவைப்படும் உடைகளை கணவர் தான் தேர்வு செய்வார்.
பல சூழ்நிலைகளில் என்னோடு என் கணவர் தான் இருப்பார் என்று தெரிவித்திருக்கிறார். மேலும் என் மீது நம்பிக்கை வைத்து மேயர் பதவி அளித்ததற்கு முதல்வருக்கு நன்றி என்று கூறியிருக்கிறார். என் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு நேரம் ஒதுக்குவதில்லை. எனவே அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
என் மகளை நான் ரொம்ப லவ் பண்றேன். தொடக்கத்தில் குடும்பத்திற்காக என்னால் நேரம் ஒதுக்க முடியவில்லை என்பதை என் மகள் புரிந்து கொள்ளவில்லை. எனினும் தற்போது வெளிவரும் செய்திகளில் முதலமைச்சரோடு இருப்பது எல்லாவற்றையும் பார்த்துவிட்டு அம்மா வேலையில் உள்ளார் என்பதை புரிந்து கொள்கிறாள் என்று தெரிவித்திருக்கிறார்.