
நகைச்சுவை நடிகர் கவுண்டமணி முன்னணி நடிகர்களை நேருக்கு நேராகவே கிண்டல் அடிப்பது குறித்து செய்யாறு பாலு பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது, தொடக்கத்தில் ரஜினி, கமல் இருவரும் தங்கள் திரைப்படங்களில் கவுண்டமணி கலாய்ப்பதை ஏற்றுக் கொண்டனர்.
அதன் பிறகு அவர்கள் உச்ச நட்சத்திரங்களாக உயர்ந்த பின் படப்பிடிப்பு தளங்களிலும் கவுண்டமணி அவ்வாறு பேசுவதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இனிமேல் கவுண்டமணியை எங்களுடன் நடிக்க வைக்காதீர்கள் என்று கூறிவிட்டனர். அப்படி நடிக்க வைத்தால் அவருக்கென்று தனி ட்ராக் கொடுத்து விடுங்கள்.
எங்களுடன் நடிக்க வேண்டாம் என்று கூறியிருக்கிறார்கள். ஆனால் அதன் பின்பு கவுண்டமணி செந்தில் கூட்டணி மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அவர்களின் நகைச்சுவை இல்லாமல் திரைப்படங்களே இல்லை என்ற அளவிற்கு அந்த கால கட்டத்தில் அவர்களின் கூட்டணியில் வந்த அனைத்து திரைப்படங்களிலும் வெற்றிபெற்றது.
எனவே, வேறு வழியின்றி ரஜினி மற்றும் கமல் இருவரும் தங்கள் திரைப்படங்களில் கவுண்டமணியை நடிக்க வைத்ததாக செய்யாறு பாலு கூறியிருக்கிறார். மேலும், அதிகம் ஈகோ பார்க்கக்கூடிய கமல், தன் திரைப்படங்களில் கவுண்டமணி கலாய்ப்பதை ஏற்றுக்கொண்டார் என்று தெரிவித்திருக்கிறார்.