
தவக்களை என்ற நடிகர் இயக்குனர் பாக்யராஜ் இயக்கத்தில் வெளிவந்த முந்தானை முடிச்சு திரைப்படத்தின் மூலம் மக்களிடையே பிரபலமானவர். அதனை தொடர்ந்து, ஓரிரு திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். ரஜினிகாந்த் ஒரு முறை இவரை திட்டிய சம்பவம் ஒன்றை பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு பேட்டி ஒன்றில் குறிப்பிட்டு இருக்கிறார்.
அவர் தெரிவித்திருப்பதாவது, ரஜினிகாந்த் ஒரு திரைப்படத்தின் படப்பிடிப்பில் இருந்தபோது தவக்களை அங்கும் இங்குமாக சென்று கொண்டு இருந்துள்ளார். உதவி கேட்பதா? வேண்டாமா? என்று தயங்கி தயங்கி ரஜினிகாந்தை பார்த்துக் கொண்டே சென்றிருக்கிறார். இதனை கவனித்த ரஜினிகாந்த், உடனே அவரை கூப்பிட்டு எதுவும் உதவி தேவையா? என்று கேட்டிருக்கிறார்.
அப்போது தவக்களை ஒரு படத்தை தயாரித்து நஷ்டமடைந்ததாக கூறியிருக்கிறார். அதனை கேட்ட உடன் கோபத்தின் உச்சிக்கு சென்ற ரஜினிகாந்த், முந்தானை முடிச்சு திரைப்படத்தின் மூலம் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை இப்படி தயாரிப்பில் ஈடுபட்டு இழக்கலாமா? என்று கடுமையாக திட்டி அனுப்பியுள்ளார். அதன் பிறகு அவரின் உதவியாளரை அழைத்து தயாரிப்பு தொடர்பில் ஏதேனும் உதவி வேண்டும் என்றால் கேளுங்கள் என்று கூறிய