
நடிகை ஸ்ரீதேவி 80-களில் புகழின் உச்சியில் இருந்து நடிகை. 16 வயதினிலே திரைப்படத்தில் மயில் என்ற கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மனங்களில் நீங்கா இடத்தை பிடித்து விட்டார். ஸ்ரீதேவியின் மறைவுக்குப் பிறகு, அவரின் மகள்கள் இருவரும் நடிக்க தொடங்கினர். ஆனால் இருவருமே தமிழ் திரைப்படத்தில் நடிக்கவில்லை.
இது குறித்து செய்யாறு பாலு பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார். தொகுப்பாளர் அவரிடம், தனுஷின் வாத்தி திரைப்படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கு ஜான்விகபூருக்கு வாய்ப்பு வந்த போது, அவரின் தந்தை போனி கபூர் தனுஷுடன் மட்டும் நடிக்க கூடாது என்று உறுதியாக கூறினாராம்.
அதற்கு காரணம் என்ன? என்று கேட்கிறார். அதற்கு செய்யாறு பாலு கூறியதாவது, ஸ்ரீதேவியின் மகள்கள் இருவருக்குமே தமிழ் திரைப்படங்கள் மற்றும் ரசிகர்கள் மீது அதிகப்பற்று இருக்கிறது. தமிழ் திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசையும் இருக்கிறது. ஆனால், வாத்தி திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு வந்த போது, நடிகர் தனுசுடன் மட்டும் கட்டாயமாக நடிக்க கூடாது என்று போனி கபூர் கூறியுள்ளார்.
தனுஷ் சிறந்த நடிகர் தான். எதற்காக போனி கபூர் அப்படி கூறினார் என்று தெரியவில்லை. அதற்கு வேறு சில காரணங்கள் இருக்கலாம் என்று தெரிவித்திருக்கிறார்.