குக் வித் கோமாளி பிரபலம் பாபா பாஸ்கரின் அழகிய குடும்பத்தை பார்த்துள்ளீர்களா..? வைரலாகும் புகைப்படங்கள்..

ஒரு நடன மாஸ்டராக பலருக்கும் தெரியாத பாபா பாஸ்கர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் ஒரு சமையல் கலைஞராக அசத்தியுள்ளார்.

   

நடனத்தில் மட்டுமல்லாமல் தன்னுடைய காமெடியின் மூலமாக ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர்.

நடன ஆசிரியராக வேண்டுமென்ற ஆசையோடு பிரபல நடன இயக்குனரான சிவசங்கர் மாஸ்டர் மற்றும் ராஜசுந்தரம் மாஸ்டரிடம் ஆரம்பத்தில் உதவியாளராக பணியாற்றினார் பாபா பாஸ்கர். இவர் பல திரைப்படங்களுக்கு நடன இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார்.

முன்னணி நடிகர்களான ரஜினி மற்றும் அஜித் உள்ளிட்ட பல நடிகர்களுடன் தமிழிலும் நாகர்ஜுனா மற்றும் மகேஷ்பாபு உள்ளிட்ட பிறமொழி நடிகர்களுடனும் பணியாற்றியுள்ளார்.

ஆரம்பத்தில் எவ்வளவு சோதனைகளை கடந்து வந்தாலும் இவரின் விடாமுயற்சியால் தற்போது தன்னுடைய திறமையை பலருக்கும் நிரூபித்துள்ளார்.

இவர் ரசிகர்களின் மத்தியில் முகத்தை காட்டி இருந்தாலும் இவருக்கு பெரிய அளவில் வரவேற்பை கொடுத்தது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான்.

இந்த நிகழ்ச்சியின் மூலம் இவரின் காமெடி மற்றும் சமையல் திறமை ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.தற்போது பல நிகழ்ச்சிகளில் இவர் கலந்து கொண்டு வருகிறார்.

இவர் பிக் பாஸ் சீசன் 3 தெலுங்கு நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார்.

தற்போது ஜீ தமிழில் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் ஜட்ஜ் ஆக இருந்து வருகிறார்.

இவ்வாறு இவர் பிஸியாக இருந்தாலும் தன்னுடைய குடும்பமும் தனக்கு அதிக அளவில் முக்கியம் தன்னுடைய வளர்ச்சிக்கு கஷ்டப்பட்ட காலங்களில் தனக்கு உறுதுணையாக இருந்தது அவர்கள்தான் என்று பல மேடைகளில் இவர் உருக்கமாக பேசியுள்ளார்.

இந்நிலையில் பாபா பாஸ்கரின் அழகிய குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகன் மற்றும் மகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.