முதல் ஆளாக போய் கண்ணீர் விட்டு…! நன்றி மறக்காத கூல் சுரேஷ்..?

மக்கள் எதிர்பார்த்தது போல் நேற்றைய தினம் பிக் பாஸ் சீசன் 7  கிரான்ட் ஓப்பனிங் நடைபெற்றது.  இதில் முதல் போட்டியாளராக கன்டென்ட் குடோன் நடிகர் கூல் சுரேஷ்நுழைந்து இருக்கிறார். சமீப காலமாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வந்த அவர் தற்போது பிக் பாஸ் போட்டியாளராக வந்திருக்கிறார் என்றால் இங்கும் எதாவது சர்ச்சைகளில் சிக்குவாரா என கேள்வி எழுந்திருக்கிறது.

   

இந்நிலையில் பிக் பாஸ் மேடையில் முதலாளாக வந்தது கூல் சுரேஷ் அழுது கதறினார், நான் இங்க வர சிம்பு மற்றும்  சந்தானம் ஆகியோர் தான்  காரணம் என கூறினார்.எனக்கு பிரச்சனைகள் வரும்போது உங்களை தான் நினைத்துக்கொள்வேன் சார்  எனவும் கூறுகிறார்.

அவர் கண்ணீர் விடுவதை பார்த்து நடிகர் கமல் ஆரம்பிக்கும்போது சந்தோசமாக ஆரம்பிக்காலம் என நினைத்தேன். ஆனால் இவர் காரியத்தை கெடுத்துவிடுவார் போல இருக்க என கூறி கூல் சுரேஷை கூல் செய்திருக்கிறார்.