
பொதுவாக பொங்கல் பண்டிகையை ஒட்டி பல கிராமங்களில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும். குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கென்று தனித்தனியாக போட்டிகள் நடைபெறும். அதில் மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்பார்கள். அந்த வகையில் கிராமம் ஒன்றில் நடந்த போட்டி குறித்த வீடியோ தான் இணையத்தில் படு வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.
தம்பதிகளுக்கென்று நடத்தப்பட்ட அந்த போட்டி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதாவது, துணைவிகள் ஒரு புறம் மிக்க கணவன்மார்கள் தங்களின் வாயில் திராட்சை எடுத்துக் கொண்டு வந்து தங்கள் மனைவியின் வாயில் ஊட்டி விட வேண்டும்.
குறிப்பிட்ட நேரத்திற்குள் அதிக திராட்சைகளை ஊட்டி விட்டவர்கள் தான் போட்டியின் வெற்றியாளர்கள். பார்ப்பதற்கு, பொழுதுபோக்காக இருக்கும் இந்த போட்டி வீடியோ தான் தற்போது இணையத்தை கலக்கிக் கொண்டிருக்கிறது. எனினும், சிலர் என்னடா போட்டி இது என்று விமர்சிக்கிறார்கள்.
View this post on Instagram