
சென்னையில் இரவு முழுவதும் மழை கொட்டி தீர்த்துக் கொண்டிருக்கும் நிலையில், சாலையில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். ஒருபுறம் வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது. கடும் சிரமங்களை சந்தித்து தான் மக்கள் சாலையில் சென்று கொண்டிருக்கிறார்கள்.
Watch | விடிய விடிய கொட்டித் தீர்த்து வரும் மழைக்கு நடுவே, பெருங்களத்தூர் – நெடுங்குன்றம் சாலையில் உள்ள வேலம்மாள் பள்ளி அருகில் முதலை ஒன்று சாலையை கடக்கும் காட்சி வெளியாகி உள்ளது!#SunNews | #Crocodile | #ChennaiRains pic.twitter.com/zQeGsuHTIO
— Sun News (@sunnewstamil) December 4, 2023
இந்நிலையில், பெருங்களத்தூர்-நெடுங்குன்றம் சாலையில் இருக்கும் வேலம்மாள் பள்ளியின் அருகே சாலையில் ஒரு முதலை அசால்ட்டாக சென்று கொண்டிருக்கிறது. சாலையில் சென்றவர்கள் அதனை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அந்த வீடியோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது.