மனிதர்களிடையே மனிதநேயம் இருக்கிறதோ இல்லையோ, மிருகங்களிடம் அதனை அதிகமாக பார்க்க முடிகிறது. குறிப்பாக மனிதர்களுக்கு மிகவும் நெருக்கமாக இருக்கும் பிராணிகள் நாய்கள் தான். ஒருவேளை உணவு கொடுத்தால் போதும் காலையே சுற்றி சுற்றி வரும். அந்த அளவிற்கு நன்றி உள்ள பிராணி நாய்.
Watch | திருவொற்றியூரை அடுத்த மணலி பகுதியில் தெருக்களில் சுற்றி வரும் நாய் ஒன்று, அங்கு பசியால் உணவின்றி தவித்து வந்த ஒரு பூனைக்கு நின்றபடியே பாலூட்டிய காட்சி காண்போரை நெகிழ வைத்தது!#SunNews | #Dog | #Cat pic.twitter.com/YSpEhYTuZr
— Sun News (@sunnewstamil) December 3, 2023
தன் முதலாளி விபத்தில் இறந்தது தெரியாமல், 5 வருடமாக ஒவ்வொரு நாளும் ரயில் நிலையத்தில் அவர் வரும் நேரத்திற்கு காத்திருக்கும் நாய் குறித்த செய்தி வெளிவந்ததை பலரும் பார்த்திருப்போம். இந்நிலையில் நாய் ஒன்று பசியால் தவித்த பூனைக்கு பாலூட்டிய வீடியோ இணையதளங்களில் வெளியாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.