மொத்த காசும் போச்சு… 50 வருஷ உழைப்பை சுரண்டிய மகன்…. நொந்துபோன நடிகர்…!

குணசித்ர நடிகராகவும், நகைச்சுவை வேடங்களிலும் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் பழம்பெரும் நடிகர் டெல்லி கணேஷ். இவர் கடந்த 1977-ஆம் வருடத்தில் வெளியான பட்டினப்பிரவேசம் எனும் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். நடிகர் திலகம் சிவாஜிகணேசன் தொடங்கி தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் வரை முன்னணி நடிகர்கள் பலரது திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

   

சுமார் 50 ஆண்டுகளாக திரைத்துறையில் இருக்கும் இவர் 400க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தற்போது பட வாய்ப்புகள் குறைந்ததால், சின்னத்திரை பக்கம் சென்றுவிட்டார். இந்நிலையில், இவரின் மகனான மகாவை கதாநாயகனாக நடிக்க வைத்து கடந்த 2016-ஆம் வருடத்தில் என்னுள் ஆயிரம் எனும் படத்தை தயாரித்தார்.

அந்த படம் கடும் தோல்வியை சந்தித்தது. சென்னையில் ஒரு சில திரையரங்கில் மட்டும் தான் இந்த படத்தை திரையிட்டனர். அதிலும் ஒரே ஒரு காட்சி மட்டும் தான். வெளியான சில நாட்களிலேயே படத்தை தூக்கிவிட்டனர். எனவே, மக்களிடையே இந்த திரைப்படம் சென்று சேரவில்லை.

இதனால், கடும் மன உளைச்சலுக்கு ஆளானார் டெல்லி கணேஷ். தான் 50 வருடங்களாக  சம்பாதித்த பணத்தை வைத்து தான் இந்த படத்தை தயாரித்திருந்தார். அந்த ஒரு திரைப்படத்தில் அவரின் 50 வருட உழைப்பும் வீணாகிவிட்டது.