
இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் நடிகர் பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, நாசர், ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், ராணா போன்ற பலர் நடித்து வெளியான பாகுபலி என்ற பிரம்மாண்டமான திரைப்படம் கடந்த 2015 ஆம் வருடத்தில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.
அதனைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகமும் வெளிவந்து ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. அத்திரைப்படத்திற்கு பிறகு நடிகர் பிரபாஸின் மார்க்கெட் உச்சத்திற்கு சென்றது. பட வாய்ப்புகளும் குவிய தொடங்கியது. அது மட்டுமல்லாமல் பாகுபலி திரைப்படத்தில் நடித்திருந்த அனைத்து கதாபாத்திரங்களும் ரசிகர்களிடையே பிரபலமானது.
மேலும், பாகுபலி திரைப்படத்திற்கு பிறகு நடிகர் பிரபாஸ் மற்றும் அனுஷ்கா இருவரும் காதலிப்பதாகவும் தகவல் பரவியது. இருவரும் இணைந்திருக்கும் பல புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலானது. அதன் பிறகு இருவரும் நண்பர்களாக பழகியதாக கூறிவிட்டனர்.
இந்நிலையில், தற்போது பாகுபலி திரைப்படத்தின் கெட்டப்பில் நடிகை அனுஷ்கா மற்றும் ராணா இருவரும் ஜோடியாக இருப்பது போன்ற புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி உள்ளது. இதனைப் பார்த்த ரசிகர்கள், இது புதுசா இருக்கே, இந்த ஜோடி எப்படி இணைந்தது? என்று கூறி வருகிறார்கள்.