
இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் திரைப்படங்கள் என்றாலே காதல் காட்சிகள் இளைஞர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும். அவரின் திரைப்படங்களில் கதாநாயகனுக்கு என்று தனி ஸ்டைல், வைத்திருப்பார். ரசிகர்களின் மிக விருப்பமான இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கும் கௌதம் வாசுதேவன், நடிகர் விக்ரமை வைத்து துருவ நட்சத்திரம் என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார்.
அத்திரைப்படம் சில பிரச்சனைகளால் ரிலீஸ் ஆவதில் தாமதம் ஏற்பட்டது. இது குறித்து வலைப்பேச்சு பிஸ்மி தெரிவித்திருப்பதாவது, துருவ நட்சத்திரம் பிரச்சனை நீதிமன்றம் வரை சென்று கௌதம் வாசுதேவனுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. எனவே, நீதிமன்றத்தில் அவர் பிப்ரவரி மாதத்தில் திரைப்படத்தை வெளியிட்டு விடுவோம்.
அதற்குள் அதற்கான பணிகள் முடிவடைந்து விடும் என்று தெரிவித்திருக்கிறார். ஆனால் பிப்ரவரி மாதம் வந்த பிறகும் திரைப்படம் வெளியாவதற்கான பணிகள் எதுவும் நடந்ததாக தெரியவில்லை. இந்நிலையில் இத்திரைப்படத்தை வாங்கிய கேரளா மற்றும் கர்நாடக விநியோகஸ்தர்கள் உடனடியாக படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என்று கூறுகிறார்களாம்.
இல்லையென்றால் பணத்தை திரும்ப தர வேண்டும் என்று அவருக்கு கடும் நெருக்கடி கொடுக்கிறார்களாம். இதனால், மிகப்பெரிய சிக்கலில் அவர் மாட்டிக் கொண்டதாக வலைப்பேச்சு பிஸ்மி தெரிவித்திருக்கிறார். ஏனெனில், தமிழ் நாட்டில் விநியோகஸ்தர்கள் முதலிலேயே எந்த படத்திற்கும் முழு பணத்தையும் கொடுக்க மாட்டார்களாம்.
படம் வெளியாக போகும் சமயத்தில் தான் கொடுப்பார்களாம். எனவே, அவர்கள் தப்பிவிட்டனர். ஆனால், கேரளா மற்றும் கர்நாடகா விநியோகஸ்தர்கள் முழு பணத்தையும் கொடுத்துவிட்டார்கள். இப்போது படம் வெளியாகவில்லை. எனவே, அவர்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது வலைப்பேச்சு பிஸ்மி விளக்கமளித்திருக்கிறார்.