தளபதி விஜய் இந்த பள்ளியில் தான் படித்தாரா?…. முதன்முறையாக இணையத்தில் வெளிவந்த புகைப்படங்கள் இதோ…

தளபதி விஜய் சிறுவயதில் படித்த பள்ளியின் புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவாக விளங்குபவர் நடிகர் விஜய். இவர் தற்பொழுது வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இத்திரைப்படம் பொங்கலுக்கு ரிலீசாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வாரிசு திரைப்படத்தை தில் ராஜு தயாரித்துள்ளார். மேலும் இப்படத்தினை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இறுதி கட்ட வேலைகள் பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டுள்ளது.

   

இப்படத்தை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் இயக்கத்தில் தளபதி 67 திரைப்படத்தில் நடிக்க உள்ளார் தளபதி விஜய். இத்திரைப்படத்தின் அறிவிப்பு வாரிசு திரைப்படத்தின் ரிலீசுக்கு பின்னர் வெளியாகும் என்று கூறப்படுகிறது. நடிகர் விஜய் பற்றிய தகவல்கள் அவ்வப்பொழுது இணையத்தில் வெளியாகி வைரலாக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் நடிகர் விஜய் படித்த கல்லூரி சென்னையில் உள்ள லயோலா கல்லூரி  நாம் அனைவரும் அறிவோம். ஆனால் நடிகர் விஜய் படித்த பள்ளி எது என்று நாம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தற்பொழுது இதைப் பற்றிய தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

அதாவது இவர் சென்னையில் உள்ள பாலோக் பள்ளியில் தான் படித்துள்ளார். இந்நிலையில் அந்த பள்ளியின் புகைப்படமும், பள்ளியில் படித்த பொழுது சிறுவனாக நடிகர் விஜய் எடுத்துக்கொண்ட புகைப்படமும் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படங்கள் தற்போது தளபதி ரசிகர்களால் வைரல் ஆக்கப்பட்டு வருகிறது.

இதோ அந்த புகைப்படங்கள்….