
தொகுப்பாளினி ரம்யா தனது விவாகரத்து குறித்து முதன் முறையாக மனம் திறந்து பேசிய தகவல்கள் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்களுக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. அந்த வகையில் முன்னணி தொகுப்பாளராக வலம் வந்தவர் தான் ரம்யா. இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு, உங்களில் யார் அடுத்த பிரபுதேவா, நம்ம வீட்டு கல்யாணம் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.
இவருடைய நிகழ்ச்சிகளுக்கென்று தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. தற்பொழுது இவர் தனியார் நிகழ்ச்சிகள், ஆடியோ வெளியீட்டு விழா போன்றவற்றை மட்டும் தான் தொகுத்து வழங்கி வருகின்றார். இதை தாண்டி ரம்யா மொழி, மங்காத்தா, ஓ காதல் கண்மணி, மாஸ் என்கிற மாசிலாமணி, வனமகன், ஆடை போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.
இறுதியாக விஜயின் வாரிசு திரைப்பட இசை வெளியீட்டு விழாவை தொகுத்து வழங்கியிருந்தார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட இவரிடம் நிருபர் ஒருவர் விவாகரத்து பற்றி கேள்வி எலிப்பியுள்ளார். அதற்கு தொகுப்பாளினி ரம்யா ‘அது ஒரு ஆறு வருடத்திற்கு முன் நடந்த ஒரு விஷயம். எனக்கு ஞாபகம் இல்லை. கண்டிப்பாக வருத்தம் இருந்தது.
மன அழுத்தத்திற்கு ஆளானேன். எனக்கு ஏன் முதலில் இப்படி நடந்தது. எதுவும் தெரியாமல் என்னை மற்றவர்கள் ஏன் தவறாக பேசுகிறார்கள் என்று நிறைய வருத்தப்பட்டேன். இந்த தாக்கத்திலிருந்து வெளிவர எனக்கு ஆறு முதல் எட்டு மாதங்கள் ஆனது. ஆனால் இந்த ஒரு விஷயத்தில் இருந்து வெளியே வரும்பொழுது எனக்கு தைரியம் மிகக் கிடைத்தது ‘என்று கூறியுள்ளார்.