
இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் கடந்த 2006 ஆம் வருடத்தில் இயக்குனர் வசந்த பாலன் இயக்கத்தில் வெளியான வெயில் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து பல திரைப்படங்களில் இசையமைத்து முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழ்ந்தார்.
அவரின் மென்மையான குரலில் பாடிய பல பாடல்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. அதனைத்தொடர்ந்து கதாநாயகனாகவும் களமிறங்கிய அவர் நடிகராக மக்களிடையே பெயர் பெற்றுவிட்டார். இந்நிலையில், இயக்குனர் ஏ.எல் விஜய், நடிகர் மாதவனை வைத்து இயக்கும் புதிய திரைப்படத்தில் ஜிவி பிரகாஷ் கிடையாது என்று வலைப்பேச்சு சக்திவேல் தெரிவித்திருக்கிறார்.
அவர் கூறியிருப்பதாவது, இயக்குனர் ஏ.எல் விஜய்யின் திரைப்படங்களில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தவறாமல் இடம்பெற்று விடுவார். ஆனால், தற்போது அவர் மாதவனை வைத்து இயக்கும் திரைப்படத்தில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் என்று கூறப்பட்டிருக்கிறது. ஏ.எல் விஜய் மற்றும் ஜிவி பிரகாஷ் இருவருக்கும் இடையே ஏதேனும் பிரச்சனையாக இருக்கலாம்.
இல்லையென்றால் நடிகர் மாதவன், ஹாரிஸ் ஜெயராஜ் தான் தனக்கு ஹிட் கொடுத்த இசையமைப்பாளர். எனவே அவரை போடலாம் என்று இயக்குனரிடம் கூறியிருப்பார் என சக்திவேல் தெரிவித்துள்ளார்.