
இயக்குனர் அமீர், ரஜினிகாந்த்திற்கு தான் கூறிய கதை பற்றி பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது, நான் ரஜினியிடம், மக்களுக்காக போராடி மக்கள் முன்னிலையில் அந்த மக்களாலேயே உயிர் உயர்நீக்கப்படும் தலைவன் என்பது முதல் பாதி.
அடுத்த பாதியில், அவரின் வாரிசு, அடிமையாக இருக்கும் மக்களை மீட்டெடுக்கும் கதையை கூறினேன். அவருக்கு அந்த கதை மிகவும் பிடித்திருந்தது. அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். அந்த கதையை நான் காட்சிகளோடு அவருக்கு விவரித்தேன். கதை மிகவும் நன்றாக உள்ளது. ஆனால் குதிரையில் ஏறுவது, அந்த மாதிரி எதுவும் சிரமப்படுத்துவீர்களா? என்று கேட்டார்.
அப்படியெல்லாம் இல்லை என்று கூறினேன். அதன்பிறகு, ரஜினி இந்த திரைப்படத்தை கமல் தயாரித்தால் உனக்கு ஓகேவா என்றும் கேட்டார். இதைவிட எனக்கு வேறு என்ன சார் வேணும்? நீங்க நடிக்கிறீங்க, கமல் சார் தயாரிக்கிறாங்க. அதுவே எனக்கு போதும் என்று கூறினேன். ஆனால், அதன் பிறகு ரஜினி சார் வேற வேற தளங்களுக்கு சென்று விட்டார்.
நானும் அந்த கதையை மீண்டும் கொண்டு வர முடியவில்லை. அதே கதையை நடிகர் விஜய்க்கும் ஒரு முறை கூறினேன். அவரும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். இந்த கதையை பண்ணலாம் என்று கூறினார். எனினும், சிறிது நாட்கள் கழித்து இந்த கதையை பண்ணலாம் என்றார். பிறகு அவரும் வேறு வேறு திரைப்படங்களில் கமிட் ஆகி மிகப்பெரிய அளவில் உயர்ந்து விட்டார் என்று தெரிவித்துள்ளார்.
அமீரின் இந்த பேட்டியை இணையத்தில் வைரலாக்கும் நெட்டிசன்கள், ரஜினி அமீர் கூறிய கதையை தன் மகளை வைத்து கோச்சடையான் என்ற பெயரின் எடுத்து ஏமாற்றிவிட்டார் என்று திட்டி தீர்த்து வருகிறார்கள்.