பருத்திவீரன் படத்தில் ராமதாஸ் பெயர்… வேணும்னு வச்சீங்களா…? அமீரின் பதில் என்ன…? வைரலாகும் வீடியோ…!

பருத்திவீரன் திரைப்பட பிரச்சனை சமீப நாட்களில் பெரும் பிரச்சனையாக விஷ்வரூபம் எடுத்தது. அது தொடர்பான வீடியோக்கள் தான் இணையத்தை கலக்கி வந்தன. இந்நிலையில், இயக்குனர் அமீர் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில், அவரிடம் ஒரு பெண் பருத்திவீரன் திரைப்படம் குறித்து கேள்வி கேட்டிருக்கிறார்.

அவர் கேட்டதாவது, பருத்திவீரன் திரைப்படத்தில் நடிகர் கார்த்தியின் தாய், தந்தை வெவ்வேறு ஜாதியை சேர்ந்தவர்கள் என்று காண்பித்திருப்பீர்கள். அவர்கள் லாரி விபத்தில் இறந்து விடுவது போன்ற காட்சி இருக்கும். அந்த காட்சியில் வரும் லாரியில் ராமதாஸ் என்ற பெயர் இடம் பெற்றிருக்கும்.

   

அது திட்டமிட்டு வைக்கப்பட்டதா? என்று கேட்பார். அதனை கேட்டு சிரித்த அமீர், இல்லை. அது திட்டமிட்டு வைக்கப்படவில்லை. அப்படி ஒரு பெயர் உள்ள லாரியை கொண்டு வர வேண்டும் என்று நாங்கள் கேட்கவில்லை. அதுவாக அமைந்தது. எதிர்பாராமல் நடந்த நிகழ்வு தான். எனினும், பார்த்து விட்டு, சரி இருக்கட்டும் என்று கூறிவிட்டோம் என்று தில்லாக பதில் கூறியுள்ளார்.