கேஎஸ் ரவிக்குமார் முதல் பாரதிராஜா வரை… இயக்குனர் சேரன் மூத்த மகள் திருமணம்… வாழ்த்திய பிரபலங்கள்..!!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் சேரன். இவர் இயக்குனராக மட்டுமில்லாமல் பல திரைப்படங்களில் ஹீரோவாகவும் நடித்திருக்கின்றார்.

   

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள பழையூர் பட்டியை சேர்ந்தவர். இவரின் மனைவி செல்வராணி. இவருக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள்.

நிவேதா பிரியதர்ஷினி மற்றும் தாமினி. இயக்குனர் சேரன் சொல்ல மறந்த கதை, தவமாய் தவமிருந்து, பொக்கிஷம், ராமன் தேடிய சீதை உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கியும் நடித்தும் இருக்கின்றார்.

இவர் இயக்கத்தில் வெளிவந்த ஆட்டோகிராப் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றது. மேலும் வசூல் ரீதியாக சாதனை படைத்தது.

பெரும்பாலும் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிப்பவர் சேரன். இவர் இயக்கிய பல படங்கள் தேசிய விருதுகளை வாங்கி இருக்கின்றது.

இடையில் சில ஆண்டுகளாக படம் இயக்குவதில் இருந்து விலகி இருந்தார் சேரன். பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாக கலந்து கொண்டு மக்கள் மனதில் மீண்டும் இடம் பிடித்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவர் ராஜாவுக்கு செக் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து ஆனந்தம் விளையாடும் வீடு என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார்.

 

இப்படத்தில் கௌதம் கார்த்திக் ஹீரோவாக நடித்திருந்தார். தொடர்ந்து வெப் சீரியஸ்களை எடுத்து வருகிறார். இவரது மூத்த மகள் நிவேதாவுக்கு நேற்று சுரேஷ் ஆதித்யா என்பவரிடம் திருமணம் நடைபெற்றது.

 

இவரின் திருமண விழாவிற்கு சமுத்திரகனி, பாரதிராஜா, பாண்டியராஜ் என பல பிரபலங்கள் கலந்து கொண்டு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். இந்த புகைப்படங்கள் இதோ..