ஓடுற பஸ்ல இருந்து குதித்த இயக்குனர்… கேப்டன் என்ன செஞ்சாரு தெரியுமா…? நெகிழ்ச்சி சம்பவம்…!

மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் தன்னுடன் நடித்த சக நடிகர்களுக்கும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் பல்வேறு உதவிகளை செய்திருக்கிறார். அவர் செய்த உதவிகள் குறித்து பலரும் தங்கள் பேட்டிகளில் கூறி வருகிறார்கள். அந்த வகையில் கேப்டன் விஜயகாந்தை வைத்து கண்ணுப்பட போகுதய்யா திரைப்படத்தை இயக்கிய பாரதி கணேஷ் பேட்டி ஒன்றில் பங்கேற்றுள்ளார்.

   

அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, வடபழனியில் பிரசாந்த் ஸ்டூடியோவில் எடிட்டிங் வேலை நடந்து கொண்டிருந்தது. அதற்காக பேருந்தில் வந்து கொண்டிருந்தபோது அவசரமாக, ஓடிக்கொண்டிருக்கும் பஸ்ஸிலிருந்து குதித்து விட்டேன். நான் குதித்த இடத்தில் ஒரு கார் வந்து நின்றது. அந்த காரில் கேப்டன் விஜயகாந்த் அவர்களும் அண்ணியும் அமர்ந்திருந்தார்கள்.

எதுக்கு ஓடுற பஸ்ல இருந்து இப்டி வந்து விழுறனு கேப்டன் திட்டுனாரு. எடிட்டிங் வேலை நடந்துகொண்டிருக்கிறது. அவசரத்திற்காக குதித்தேன் என்று கூறினேன். உடனே, வண்டி வைத்துக்கொள்ளலாமே பஸ்ல ஏன் வர்றனு கேட்டார். வேலை அவசரத்திற்காக வந்தேன் என்று கூறினேன்.

அண்ணி ரொம்ப நல்லவங்க. கணேஷ், நாளைக்கு நீ வந்து காரை எடுத்துக்கொள். கேப்டனை வைத்து படம் எடுத்துவிட்டு இப்படி நீ பஸ்ல வரலாமானு சொன்னாங்க என்று கூறியிருக்கிறார்.