திரௌபதி, பகாசுரன் பட இயக்குனர் மோகன் ஜி – யின்  மனைவி மற்றும் மகளா இது?… பலரும் பார்த்திடாத  அழகிய குடும்ப புகைப்படம்…

தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனராக மோகன் ஜி வலம் வந்து கொண்டுள்ளார். இவர்  பழைய வண்ணார்பேட்டை என்ற படத்தின் மூலம் தான் இயக்குனராக தமிழ் சினிமாவில் அடி எடுத்து வைத்தார். பின் நீண்ட இடைவேளைக்கு பிறகு மோகன் அவர்கள் திரௌபதி என்ற படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் ஜாதி ரீதியாக பிற்போக்கு தனமான கருத்துகளை பேசியிருக்கிறது என்று சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

   

இருந்தாலும் இந்த படம் மக்கள் மத்தியில் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இதனை அடுத்து இயக்குனர் மோகன் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த படம் ருத்ரதாண்டவம். இந்த படமும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தை மையமாக கொண்ட கதை. இந்தப் படத்தை குறித்தும் சோசியல் மீடியாவில் சில சர்ச்சைகள் எழுந்து இருந்தது.

இதைத்தொடர்ந்து பகாசூரன் என்ற படத்தை இயக்கி இருந்தார். இந்த படத்தில் செல்வராகவன் நாயகனாக நடித்து இருக்கிறார். மேலும், நட்டி, ராதாரவி, vj லயா என்று பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்து இருக்கிறார். இந்த படம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று, நல்ல வசூலும் செய்து வருகிறது. இந்நிலையில் தான் இப்படத்தை தமிழ் நாடு முழுவதும் வெளியிட்ட GTM Presents நிறுவனத்தின் தயாரிப்பாளர் கௌதம்,

இயக்குனர் மோகன் ஜியை பாராட்டும் வகையில் 5 லட்சம் மதிப்புள்ள வாட்ச் மற்றும் ஒரு தங்க மோதிரத்தை பரிசாக வழங்கினார். இதுதொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வைரலானது.

இயக்குனர் மோகன். ஜி மோகனா  என்பவரை திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு   ஒரு மகளும் உள்ளார். தற்பொழுது இயக்குனர் மோகன் ஜி அவர்கள் கோயிலுக்கு தனது மகள் மற்றும் மனைவியுடன் சாமி தரிசனத்திற்கு சென்றுள்ளார் .அங்கு எடுத்த அழகிய புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இதோ அந்த  அழகிய குடும்ப புகைப்படம்…