சீரியல் நடிகர் ராஜ்கமல் மற்றும் லதா தம்பதியின் மூத்த மகளா இது?…  வைரலாகும் டிக் டாக் வீடியோ…

சன் டிவியில் மிகவும் பிரபலமான சீரியல் ஒன்று அபியும் நானும். இந்த சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. அதிலும் சிறுவர்கள் மத்தியில் மிகவும் பிடித்த சீரியலாக இருந்தது. இந்த சீரியலில் அபி மற்றும் நிதிஷ் என்ற இரண்டு சிறுவர்கள் நடித்திருப்பார்கள். இவர்களின் நடிப்பு ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த விதமாக இருந்தது.

   

அதில் அபியின் வளர்ப்பு தந்தையாக நடித்தவர் தான் பிரபல சீரியல் நடிகர் ராஜ்கமல். இவர் கடந்த 2003ஆம் ஆண்டு டிவி சீரியலில் நடிகராக அறிமுகமானார். அதன் பிறகு பல சீரியல்களில் நடித்துள்ளார். இவர் சீரியலை தாண்டி வெள்ளித்திரையில் சரோஜா, லிங்கா, நவீன சரஸ்வதி சபதம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.

இவர் சீரியல் நடிகை லதா ராவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். நடிகை லதா ராவ் பல சீரியல்களில் நடித்துள்ளார். சன் டிவியில் ஒளிபரப்பான மெட்டிஒலி செல்வி மற்றும் திருமதி செல்வம் உள்ளிட்ட பல சீரியல்களில் இவர் நடித்திருக்கிறார். இருவரும் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஒரு பிரபல நடன ரியாலிட்டி ஷோவில் பங்கேற்று காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

அது மட்டும் இல்லாமல் பல திரைப்படங்களிலும் துணை கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றார். அதிலும் குறிப்பாக ஜெயம் ரவியின் தில்லாலங்கடி திரைப்படத்தில் வடிவேலுக்கு மனைவியாக நடித்திருப்பார். இந்த தம்பதிகளுக்கு லாரா மற்றும் ராகா என்ற இரண்டு மகள்கள் இருக்கிறார்கள்

சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் ராஜ்கமல். இவர் தற்பொழுது தனது மகளுடன் இணைந்து எடுத்துக் கொண்ட அழகான டிக் டாக் வீடியோ ஒன்றை இணையத்தில் பதிவு செய்ய இந்த வீடியோ ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது. இதோ அந்த வைரல் வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by rajkamal (@rajkamal.actor)