கமலுக்காக எழுதப்பட்ட கதை.. ஜீவா நடித்து.. பெரிய அளவில் பேசப்பட்ட திரைப்படம் எது தெரியுமா..?

திரையுலகை பொருத்தவரை அதிக திறமை கொண்ட, கடுமையாக உழைக்கும் கதாநாயகர்களோ, இயக்குனர்களோ எளிதில் மக்களிடம் அங்கீகாரம் பெறுவதில்லை. அவர்களின் உழைப்புக்கான வெற்றி அவர்களுக்கு தாமதமாகத்தான் கிடைக்கிறது.

அந்த வகையில் இயக்குனர் ராம், முதல் திரைப்படத்தை இயக்கப்போகும் சமயத்தில், இயக்குனர் பாலுமகேந்திரா, முதல் திரைப்படம் கமர்சியலாக எடு, அதிக சென்சிடிவ் ஆக முதலிலேயே எடுக்க வேண்டாம் என்று அறிவுரை கூறியுள்ளார். ஆனால், ராம் தன் கதையை படமாக்குவதில்  உறுதியாக இருந்துள்ளார்.

   

அவர் உலகநாயகன் கமல்ஹாசனுக்காக அவரை மனதில் வைத்து எழுதிய கதை தான் கற்றது தமிழ். ஆனால் அந்த கதையை எடுத்துக்கொண்டு கமல்ஹாசனை நெருங்க கூட அவரால் முடியவில்லையாம். பல நடிகர்களிடம் சென்று கதையை கூறியுள்ளார். யாரும் நடிப்பதற்கு தயாராக இல்லையாம்.

நடிகர் ஜீவாவிற்கு அந்த கதை பிடித்து போக, உடனே நடிக்க சம்மதித்திருக்கிறார். 3 வருடங்களாக கடுமையாக உழைத்து, இறுதியில் 2007-ஆம் வருடத்தில் அந்த படம் வெளிவந்திருக்கிறது. அந்த சமயத்தில், மக்கள் அந்த திரைப்படத்திற்கு வரவேற்பு கொடுக்கவில்லை.

அப்போது, இயக்குனர் ராம், நல்ல படைப்புகள் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும். ஆனால், அதற்கு தாமதம் ஆகும் என்று கூறியுள்ளார். அதேபோல், தற்போது கற்றது தமிழ் திரைப்படம் மக்களிடையே பேசப்படுகிறது, பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.