தனது மகனின் இருசக்கர வண்டியை ஓட்டும் இயக்குனர் செல்வராகவன்… ”ஐயா ரொம்ப ஸ்பீடா போறீங்க பொறுமையா போங்க”… கலாய்க்கும் ரசிகர்கள்…

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் இயக்குனர் செல்வராகவன். இவரது இயக்கத்தில் வெளிவந்த முதல் திரைப்படம் ‘துள்ளுவதோ இளமை’. இயக்குனர் செல்வராகவன் பிரபல நடிகர் தனுஷின் அண்ணனும் ஆவார். இவர் இறுதியாக தனுஷ் நடிப்பில் வெளியே வந்த ‘நானே வருவேன்’ திரைப்படத்தை இயக்கியிருந்தார்.

   

இயக்குனராக மட்டுமின்றி தற்பொழுது நடிகராகவும் பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார். அந்த வகையில் சாணிக்காயிதம், பீஸ்ட் போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார். இறுதியாக இவர் நடிப்பில் இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் ‘பகாசுரன்’ திரைப்படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

நடிகை சோனியா அகர்வால் காதல் திருமணம் செய்து அவரை விவாகரத்து செய்தார். இதை தொடர்ந்து அவர் கீதாஞ்சலி என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்பொழுது மூன்று குழந்தைக்கு தந்தையாக உள்ளார்.

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் இயக்குனர் செல்வராகவன். இவர் தற்பொழுது தனது மகனின் இருசக்கர வாகனத்தை,, மகனைப் பின்னால் அமர வைத்து ஓட்டும் க்யூட்டான வீடியோ ஒன்றை இணையத்தில் பதிவு செய்துள்ளார். இதோ அந்த வைரல் வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by Selvaraghavan (@selvaraghavan)