
இயக்குனர் விக்ரமன் இயக்கத்தில் நடிகர் விஜயகாந்த், பிரபுதேவா, லிவிங்ஸ்டன், மீனா, ரமேஷ் கண்ணா உட்பட பல நடித்து, கடந்த 2000-ஆம் வருடத்தில் வெளிவந்த வானத்தைப்போல திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அத்திரைப்படம் அண்ணன் தம்பிகளின் பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டது.
அத்திரைப்படத்தின் பாடல்கள், நகைச்சுவை காட்சிகள் என்று அனைத்துமே தற்போது வரை மக்களால் ரசிக்கப்படுகிறது. இந்நிலையில், சமீபத்தில் இயக்குனர் விக்ரமன் பங்கேற்ற பேட்டி ஒன்றில் வானத்தை போல திரைப்படம் குறித்து பேசியிருக்கிறார். அதில், அவர் தெரிவித்திருப்பதாவது, வானத்தைப்போல திரைப்படத்தில் விஜயகாந்த்தை நடிக்க வைப்பதற்கு தயக்கமாக இருந்தது.
ஏனெனில், ஒரு ஆக்சன் ஹீரோவை எப்படி குடும்ப கதையில் நடிக்க வைப்பது என்று யோசித்தேன். அதன் பிறகு, தான் தயாரிப்பாளர், இதற்கு முன்பே விஜயகாந்த் வைதேகி காத்திருந்தால், என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான் போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
எனவே, அவருக்கு இது சரியாக வரும் என்றார். அதன் பின்பு தான், அவருக்காக படத்தின் கதையை மாற்றினேன். படத்தின் முதல் பாதி இது கிடையாது. விஜயகாந்த், மீனா இருவரின் காதல் கதை தான் இப்படத்தின் முதல் பாதி. ஆனால், நான் எழுதிய கதையில் தொடக்கத்திலிருந்து இறுதிவரை அண்ணன் தம்பிகளின் பாச கதை மட்டும் தான் வரும் என்று கூறியிருக்கிறார்.