‘லியோ’ படத்தில் நடிகை திரிஷாவிற்கு ‘டப்பிங் செய்த பிரபலம்”… யார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தான் நடிகை திரிஷா. இவர் தமிழில் ஏராளமான படங்களில் நடித்த முன்னடி நடிகையாக வலம் வருகிறார்.  இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் லியோ படத்தின் ட்ரைலர்  தற்போது இணையத்தில் அதிகம் ட்ரெண்ட் ஆகி வருகிறது. லோகேஷ் அவர் பாணியில் மிரட்டலான காட்சிகளை படம் முழுக்க வடிவமைத்து இருப்பது ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

   

படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடித்து இருக்கிறார். ட்ரெய்லரில் த்ரிஷாவின் சில காட்சிகள் மட்டுமே இடம்பெற்று இருக்கிறது.இப்படத்திற்கு  திரிஷாவுக்கு டப்பிங் ஆர்டிஸ்   சின்மயி  குரல் கொடுத்துள்ளார்.அவர் மீது  மீ டு புகார் கொடுத்த பிறகு, டப்பிங் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டதால், கடந்த பல வருடங்களாக தமிழ் சினிமாவில் எந்த வாய்ப்பும் கிடைக்காமல் இருந்தார்.

தற்போது லியோ படம் மூலமாக சின்மயி மீண்டும் கம்பேக் கொடுத்திருக்கிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழில்களிலும் அவர் தான் டப்பிங் பேசி உள்ளாராம். அதற்காக  இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு நன்றி கூறி, அவரது தைரியத்தை பாராட்டுவதாகவும் twitter பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.