நடிகர்  ரஜினி கட்டிப்பிடித்துக் கொண்டிருக்கும் சிறுவர் யார் தெரியும?… என்னது  அந்த  சிறுவர்  பாலிவுட் நடிகரா!!!

அடிக்கடி சினிமா பிரபலங்களின் சிறு வயது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாவது வழக்கமான ஒன்று இந்த புகைப்படத்தில் இருப்பவர் யார் என்று கேட்டு ரசிகர் பலரும் கேள்வி எழுப்பி வருவார்கள்.அந்த வகையில் தற்போது இந்திய சினிமாவை தாண்டி இந்திய சினிமாவை தனது நடிப்பாலும் நடனத்தாலும் அதிர வைத்த நடிகர் ஒருவரின் சிறுவயது புகைப்படமானது இணையத்தில் வெளியாகியுள்ளது.

   

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கட்டிப்பிடித்தது போன்ற புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. தற்போது அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் யார் இந்த சிறுவன் என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். அவர் வேறு யாருமில்லை பாலிவுட் நடிகரான ரித்திக் ரோஷன் தான் இந்திய சினிமாவில் டாப் நட்சத்திரங்களில் ஒருவராக இருந்து வருபவர் .

நடிகர் ரித்திக் ரோஷன்  குழந்தை நட்சத்திரமாக இருந்தபோது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து ‘பகவான் தாதா’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.  அப்போது எடுத்த புகைப்படம் தான் இது. நடிகர் ரித்திக் ரோஷனா அந்த சிறுவன்  என்று ஆச்சரியத்துடன் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.