இந்த புகைப்படத்தில் க்யூட்டாக இருக்கும் பிரபல சீரியல் நடிகை யார் தெரியுமா?… அட இவரா?… கண்டுபுடிங்க பார்க்கலாம்…

விஜய் தொலைக்காட்சியில் தற்பொழுது பல சீரியல்கள் ஹிட் ஆக ஓடிக்கொண்டிருக்கிறது. அப்படி ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘தென்றல் வந்து என்னை தொடும்’. இந்த தொடரில் வினோத் மற்றும் பவித்ரா இருவரும் ஹீரோ மற்றும் ஹீரோயின்களாக நடித்து வருகின்றனர். இவர்களின் ரொமான்ஸுக்காகவே இந்த சீரியலை விரும்பி பார்ப்பவர்கள் ஏராளம்.

   

இந்த சீரியலில் நடிகை பவித்ரா மிகவும் தைரியமான பெண்ணாக நடித்து அசத்தி வருகிறார். இதை தொடர்ந்து இந்த சீரியல் மூலம் இவர் மக்கள் மத்தியில் மிகப் பிரபலம் அடைந்துள்ளார். தற்பொழுது நடிகை பவித்ராக்கு இன்னும் ஒரு சில நாட்களில் பிறந்தநாள் வர இருக்கிறது. அவரது  பிறந்த நாளை கொண்டாடுவதற்காக அவரது ரசிகர்கள் இணையத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

இந்த வீடியோவில் நடிகை பவித்ராவின் சிறுவயது புகைப்படம் இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோ தற்பொழுது படு வைரலாகி வருகிறது. இந்த விடியோவை பார்த்த ரசிகர்கள் வாவ் செம கியூட் என்று கமெண்ட் செய்தும் வருகின்றனர்.

இதோ அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by love for Pavi (@only_pavi_crazyyy)