‘குக் வித் கோமாளி’ தீபா அக்காவா இது?…. கல்யாணத்துக்கு முன்னாடி நீங்க இவ்ளோ ஒல்லியா?… வைரலாகும் புகைப்படம்… ஷாக்கான ரசிகர்கள்…

குக் வித் கோமாளி பிரபலமான தீபா அக்காவின் இளம் வயது புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்தவர் தீபா அக்கா. இவர் ரசிகர்கள் மத்தியில் இந்த நிகழ்ச்சியின் மூலம் பெருமளவில்  பிரபலமானார்.

   

சின்னத்திரையில் கிடைத்த பிரபலம் மூலம் இவர் வெள்ளித்திரையில் கால்பதித்து பல்வேறு திரைப்படங்களில் துணைக் கதாபாத்திரங்களில் நடித்து கொண்டு வருகிறார். அந்த வகையில் வெடிகுண்டு முருகேசன், மாயாண்டி குடும்பத்தார், கடைக்குட்டி சிங்கம் என பல திரைப்படங்களில் தனது திறமையை நிரூபித்து அசத்தியுள்ளார்.

மேலும் இவர் எப்பொழுதும் தனது வெளிப்படையான பேச்சாலும், சிரிப்பாலும் தன்னைச் சுற்றி இருப்பவர்களை கலகலப்பாக வைத்துக் கொள்ளும் நடிகை. எனவே இவரை மக்களுக்கு மிகவும் பிடித்துள்ளது என்று கூறலாம். இவர் ஏராளமான சின்னத்திரை சீரியல்களிலும் தற்போது பிஸியாக நடித்துக் கொண்டு வருகிறார்.

இப்படி சின்னத்திரை வெள்ளித்திரை என்று பிசியாக கலக்கி கொண்டு வரும் நடிகை தீபாவின் குடும்ப வாழ்க்கை பற்றி பார்க்கும் பொழுது இவர் சங்கர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்பொழுது இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் நடிகை தீபாவின் இளம் வயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.. இதை பார்த்து ரசிகர்கள் ‘கல்யாணத்துக்கு முன்னாடி நீங்க இவ்ளோ சிலிம்மா?’ என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

வைரலாகும் அந்த புகைப்படம் இதோ…