
தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை மீனா 90களில் முன்னணி நாயகியாக வலம் வந்தார். அவரின் குழந்தைத்தனமான பேச்சு, அழகான சிரிப்பு, வசீகரிக்கும் முகம் போன்றவற்றால் ரசிகர்களை ஈர்த்தார். கமல், ரஜினி, அஜித் போன்ற முன்னணி கதாநாயகர்களோடு ஜோடி சேர்ந்து புகழடைந்த மீனா, அதன் பிறகு திருமண வாழ்கைக்குள் ள் அடி எடுத்து வைத்தார்.
அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. அதன் பிறகு அக்கா மற்றும் அண்ணி போன்ற கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கினார். இதனிடையே, அவரின் கணவர் நுரையீரல் தொற்று நோய் பாதித்து இறந்து விட்டார். தற்போது மீண்டும் திரையுலகில் இரண்டாவது சுற்றுக்கு மீனா தயாராகியுள்ளார்.
மோகன்லாலுடன் திரிஷ்யம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அத்திரைப்படம், அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை அளித்தது. தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்று ஆர்வத்துடன் இருக்கிறார். இந்நிலையில், மீனா புகழின் உச்சியிலிருந்த சமயத்தில் நடிகர் சரத்குமார் அவரை காதலித்திருக்கிறார். என்னை திருமணம் செய்வீர்களா? என்று கேட்டிருக்கிறார்.
வேண்டாம் என்று மறுத்து விட்டால் பகையாகி விடுவோமா? என்ற பயத்தில் மீனா வீட்டில் வந்து பெண் கேளுங்கள் என்று கூறிவிட்டாராம். அதன்படி சரத்குமாரும் அவரின் வீட்டிற்கு சென்று பெண் கேட்டிருக்கிறார். ஆனால், மீனாவின் தாயார் தற்போது தான் அவள் திரையுலகில் வளர்ந்து வருகிறாள்.
இப்போது திருமணம் குறித்து நாங்கள் சிந்திக்கவில்லை என்று கூறி மறுத்து விட்டாராம். அதாவது அப்போது, சரத்குமாருக்கு சாயா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்திருந்தது. இரண்டாவதாக தான் மீனாவை திருமணம் செய்து வைக்குமாறு கேட்டு இருக்கிறார். எனவே, தான் மீனாவின் தாயார் மறுத்துவிட்டார் என்று கூறப்பட்டிருக்கிறது.