‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபல கிரிக்கெட் நட்சத்திரங்கள்… வைரலாகும் அழகிய புகைப்படங்கள்…

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஹிட் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று ‘குக் வித் கோமாளி’.

   

இந்த ஷோவின் முக்கிய நோக்கம் சமையல் நிகழ்ச்சியை காமெடி கலந்து கலகலப்பாக கொடுப்பதே ஆகும்.

கொரோனா லாக் டவுன்  சமயத்தில் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சி பலரது மனதை வெகுவாக கவர்ந்துள்ளது.

தற்பொழுது இந்த நிகழ்ச்சியின் 3 சீசன் நிறைவடைந்து, 4வது சீசன் தற்பொழுது பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகி வருகிறது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் முதல் சீசனில் வெற்றியாளராக வனிதா விஜயகுமாரும், இரண்டாவது சீசன் வெற்றியாளராக கனியும், மூன்றாவது சீசன் வெற்றியாளராக ஸ்ருதிகாவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மேலும் இந்த சீசனில் சிங்கப்பூர் தீபன், ஜி பி முத்து ஆகியோர் கோமாளிகளாக களமிறங்கி உள்ளனர்.

இவரை தொடர்ந்து இந்த சீசனில் குக்காக ‘வலிமை திரைப்படத்தில் அஜித்தின் தம்பியாக நடித்திருந்த ராஜ் ஐயப்பாவும்,  பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அசத்திய ஷெரினும், ரஜினியுடன் முத்து திரைப்படத்தில் நடித்த நடிகை விசித்ராவும்,

நாய் சேகர் பட இயக்குனர் கிஷோர், சீரியல் நடிகரான விஜே விஷால் மற்றும் சிவாங்கி போன்றோர் களமிறங்கி கலக்கி வந்தனர்.

இதில் டாப் 5ல் முதல் ஆளாக சிவாங்கி சென்றுவிட்டார். இதைத்தொடர்ந்து இறுதி போட்டிக்கு செல்லக் கூடிய போட்டியாளர்கள் யார் என அறிய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இதைத்தொடர்ந்து யார் டைட்டிலை வெல்வார்கள் என்பதையும் நாம் பொறுத்திருந்து பார்க்கலாம்.

தற்பொழுது குக் வித் கோமாளி நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டி வருகிறது. இந்நிலையில் இந்நிகழ்ச்சியில் பிரபல கிரிக்கெட் வீரர்களான வெங்கி ஐயர் மற்றும் சக்கரவர்த்தி வருண்  இருவரும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளனர்.

இப்புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.