இளம் வயதில் கோவையின் முதல் பெண் பேருந்து ஓட்டுனராக பொதுமக்கள் மத்தியில் பிரபலமானவர் ஷர்மிளா. கோவை மாவட்டம் வடவள்ளி பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் மகேஷ் என்பவரின் மகள் ஷர்மிளா. இவருக்கு வயது 24. இவரின் விருப்பத்தின் பேரில் இவரின் தந்தை ஷர்மிளாவுக்கு ஓட்டுநர் பயிற்சி அளித்தார். கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் கோவை மாநகர் பகுதிகளில் இளம் பெண் ஷர்மிளா ஆட்டோ ஓட்டி பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தார்.
இதனையடுத்து கனரக வாகனங்களை ஓட்ட வேண்டும் என்ற விருப்பத்தை தந்தையிடம் கூறியுள்ளார் ஷர்மிளா. அவரும் ஓட்டுநர் பயிற்சி பள்ளிக்கு மகளை அனுப்பி உள்ளார். அங்கு கனரக வாகனங்களை ஓட்ட கற்றுக் கொண்ட ஷர்மிளா, தனியார் பேருந்து ஓட்டுநராக களமிறங்கினார். காந்திபுரம் பேருந்து நிலையத்தில் அவர் ஆண்களுக்கு நிகராக பேருந்தை இயக்கிய காட்சிகள் வைரலானது.
மேலும் அரசியல் கட்சித் தலைவர்கள் முதல் முக்கிய பிரமுகர்கள் என ஏராளமானோர் ஷர்மிளாவுக்கு வாழ்த்துதெரிவித்தனர். இந்த நிலையில் மூன்று தினங்களுக்கு முன் எம்பி கனிமொழி, ஷர்மிளா ஓட்டுநராக பணி புரிந்த பேருந்தில் பயணம் செய்ததுடன் ஷர்மிளாவுக்கு வாழ்த்து தெரிவித்தார். இதனையடுத்து ஏற்பட்ட பேருந்து உரிமையாளருடன் ஏற்பட்ட மோதல் காரணமாக ஷர்மிளா பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார்.
இந்நிலையில் கோவையை சேர்ந்த பேருந்து ஓட்டுநர் ஷர்மிளாவுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கார் பாரிசாக வழங்கினார். கமல் பண்பாட்டு மையம் சார்பாக அவருக்கு Maruti Suzuki Ertiga காருக்கான முன்பணத்தை கமல்ஹாசன் ஷர்மிளாவுக்கு வழங்கினார். வாடகை கார் ஓட்டும் தொழில் முனைவோராக ஷர்மிளா தனது பணியை தொடர உள்ளதாக கமல்ஹாசன் தெரிவித்தார்.
ஷர்மிளா குறித்த சமீபத்திய விவாதத்தை அறிந்து மிகுந்த வேதனை அடைந்ததாவும், ஷர்மிளா தன் வயதையொத்த பெண்களுக்கு முன் உதாரணமாக திழ்வதாகவும் கமல் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும் ‘மகள் ஷர்மிளாவிற்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்’ என்றும் குறிப்பிட்டுள்ளார். தற்பொழுது இது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வைரல் வீடியோ…
Coimbatore’s first woman bus driver #Sharmila who quit her job after a controversy erupted over issuing a ticket to DMK MP Kanimozhi, has been gifted with a brand new car by MNM leader #KamalHaasan ???? nice gesture! pic.twitter.com/vJxRlHH0Ie
— Siddarth Srinivas (@sidhuwrites) June 26, 2023