
நடிகர் சூர்யா நேருக்கு நேர் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து பல திரைப்படங்களில் இளம் நாயகனாக அமைதியான கதாபாத்திரங்களில் நடித்து வந்த அவர் அதிரடி நாயகனாக மாறினார். தொடர்ந்து பல வெற்றி திரைப்படங்களை கொடுத்து தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார்.
குறிப்பாக, ஜில்லுனு ஒரு காதல் திரைப்படத்தில் அவரின் கதாபாத்திரம் பெண்களை வெகுவாக கவர்ந்தது. மேலும், சூர்யா தன் திரைப்படங்களில் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் வித்தியாசம் காண்பிக்கக்கூடியவர். எனவே, நடிப்பின் நாயகன் என்று ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். இவருக்கு பெண் ரசிகைகள் தான் அதிகம்.
அதிலும், குறிப்பாக கல்லூரி இளம் பெண்கள் பெரும்பாலானோர் இவருக்கு ரசிகைகளாக இருப்பார்கள். அந்த வகையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகர் சூர்யாவிடம் இளம் பெண் ஒருவர், நான் உங்களின் மிகப்பெரிய ரசிகை என்று கூறுவார்.
மேலும் அந்த பெண் சூர்யாவிடம், ஜோதிகா அண்ணி, யாருடன் நீங்கள் ஜோடி சேர்ந்து நடித்தால் ஜோடி பொருத்தம் நன்றாக உள்ளது என்று கூறுவார்? என்று கேட்டார். அதற்கு சூர்யா வெட்கப்பட்டு கொண்டே சிரித்தார். உடனே அந்த பெண் நீங்கள் வெட்கப்படுவதை பார்ப்பதற்காகத்தான் இந்த கேள்வியை கேட்டேன் என்று கூறுவார்.
View this post on Instagram