இது என்ன ஆச்சர்யம்….? அப்டியே ராஸ்மிகாவை உரித்து வைத்திருக்கும் பெண்… தீயாய் பரவும் வீடியோ…!

நடிகை ராஸ்மிகா மந்தனா, விஜய், அமிதாப் பச்சன், ரன்பீர் கபூர் மற்றும் அல்லு அர்ஜுன் போன்ற முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தற்போது பிசியாக திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த உலகில் ஒருவரை போல் 7 பேர் இருப்பார்கள் என்று கூறப்படுவதுண்டு.

   

ஆனால், அப்படி இருப்பவர்கள் எல்லாரும் பிரபலமாவதில்லை. சினிமா நட்சத்திரங்களை போன்று யாராவது இருந்தால், அவர்கள் உடனே பிரபலமாகி விடுவார்கள். அந்த வகையில் தற்போது, ரஷ்மிகா மந்தனா போல் இருக்கும் ஒரு பெண்ணின் வீடியோ வைரலாகி வருகிறது. அதனை பார்த்த ரசிகர்கள், ராஸ்மிகா மந்தனாவா இது? என்று கேட்பதுடன் சிலர் மார்பிங் செய்த புகைப்படம் போன்று இருப்பதாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.