எல்லாத்தையும் ஓரம் கட்டிட்டு…. தனுஷ் தான் முக்கியம்னு களமிறங்கிய H.வினோத்… வெளியான மாஸ் தகவல்…!

இயக்குனர் H.வினோத், தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு போன்ற வெற்றி படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் பிரபல இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் அவர், நடிகர் தனுசை வைத்து ஒரு திரைப்படம் இயக்க இருப்பதாக வலைப்பேச்சு பிஸ்மி தெரிவித்திருக்கிறார்.

   

இது பற்றி அவர் கூறியிருப்பதாவது, இயக்குனர் H.வினோத், கமலஹாசனை வைத்து ஒரு திரைப்படம் இயக்குவதற்காக ஒரு வருடம் காத்திருந்தார். ஆனால் அது நடக்காததால் அவர் யோகி பாபுவை வைத்து சிறிய திரைப்படம் ஒன்றை இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.

அது மட்டுமல்லாமல் தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கிவிட்டு, அதன்பிறகு தனுஷ் திரைப்படத்தை அவர் இயக்குவதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், அவர் அனைத்தையும் தள்ளி வைத்துவிட்டு முதலில் தனுசை வைத்து படம் இயக்குவது உறுதியாகியுள்ளது என்று வலைப்பேச்சு பிஸ்மி தெரிவித்திருக்கிறார். அத்திரைப்படம் குறித்த அப்டேட்டுகள் விரைவில் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.