‘Happy birthday to my lovable’ மனைவியின் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறி பதிவு வெளியிட்ட ‘எதிர்நீச்சல்’ சீரியல் ஞானம்… வாழ்த்தும் ரசிகர்கள்…

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஞானசேகரன் கேரக்டரில் ரசிகர்களின் மத்தியில் பிரபலமான கமலேஷ். தற்போது ஞானம் என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்டு வருகிறார். இவர் சன் டிவியில் ஒளிபரப்பான ஆனந்தம் சீரியலின் மூலமாக அதிகமாக ரசிகர்களின் மத்தியில் பிரபலமானவர்.

   

பல வருடங்களாக இவர் சின்னத்திரை வெள்ளி திரையில் நடித்துக் கொண்டிருந்தாலும் இவருக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றன. சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் எப்போதும் பிரபலங்களோடும் தன்னுடைய குடும்பத்தோடும் எடுக்கும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

கமலேஷ் ஜி தமிழ் டிவி சேனலில் சூப்பர் சிங்கர் செலிப்ரட்டி என்ற போட்டியில் ஒரு போட்டியாளராக பங்கேற்றார்.

அப்போது அதே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மற்றொரு பிரபலமான சிந்துஜாவை காதலித்து  திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணத்தில் பல சின்னத்திரை, வெள்ளித்திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

நடிகர் கமலேஷுக்கு கிட்டத்தட்ட 12 வருடங்களுக்கு பிறகு தான் பெண் குழந்தை பிறந்தது. சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகர் கமலேஷ்.

இவர் தற்பொழுது தனது மனைவியின் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இப்பதிவினை பார்த்த ரசிகர்களும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இதோ அந்த பதிவு…

 

View this post on Instagram

 

A post shared by Kamalesh PK (@actorkamalesh)