மறைந்த பிரபல காமெடி நடிகர் மயில்சாமியின் மகனை பார்த்திருக்கீங்களா?… அவரும் ஒரு பிரபல நடிகரா?… புகைப்படம் உள்ளே…

தமிழ் சினிமாவில் காமெடியில் கலக்கிய நடிகர் மயில்சாமி. இவர் காமெடி கதாபாத்திரம் மட்டுமின்றி குணச்சித்திர கதாபாத்திரத்திலும் அசத்தியவர். மயில்சாமி என்றாலே அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் குணம் என்பது தான் எல்லாரும் அறிந்தது. இவர் 1984ல் வெளியான பாக்கியராஜின் ‘தாவணி கனவுகள்’ திரைப்படத்தில் அட்மாஸ்பியர் ஆர்டிஸ்ட் ஆக திரைத்துறையில் நுழைந்தவர்.

   

இதைத்தொடர்ந்து அடுத்த ஆண்டே ‘கன்னி ராசி’ திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தில் கமலஹாசனின் நண்பராகவே கலக்கினார். இதை தொடர்ந்து ரஜினிகாந்தியின் ‘பணக்காரன்’ திரைப்படத்தில் நடித்தார் மயில்சாமி.

அதன் பிறகு தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் நடித்து அசத்தினார். அஜித்துடன் பூவெல்லாம் உன் வாசம், ராஜா உள்ளிட்ட படங்களில் நடித்த மயில்சாமி, விஜயுடன் வசீகரா படத்தில் நடித்தார்.

நகைச்சுவை நடிகர்கள் விவேக் மற்றும் வடிவேலுவுடன் பல படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளார் மயில்சாமி. இவர் மிமிக்ரி செய்வதில் வல்லவர். கடைசியாக இவர் நடித்த படம் உடன் பால்.

இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ரஜினிகாந்த், கமலஹாசன் முதல் தனுஷ் வரை அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்தார் நடிகர் மயில்சாமி.

தற்பொழுது நடிகர் மயில்சாமி திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இன்று மரணம் அடைந்தார். இவரின் மரணத்தை அறிந்த திரையுலகினரும் ரசிகர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கலை பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் மயில்சாமியின் மகனைப் பற்றிய தகவல்கள் இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது. கடந்த 2009ல் தனது மகன் அருமை நாயகம் திரைப்படங்கள் நடிக்க தயார் என மயில்சாமி அறிவித்தார்.

இதை தொடர்ந்து அவரின் பெயரை அன்பு என்றும் மாற்றினார். இதைத்தொடர்ந்து ராசு மதுரவனின் பார்த்தோம் பழகினோம் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார் அன்பு .

இதைத் தொடர்ந்து இவர் 2015 இல் வெளியான ’60 நாட்கள்’ படத்திலும் நடித்துள்ளார். இவர் நடிகராக மட்டுமின்றி ஒரு சில படங்களில் குரலும் கொடுத்துள்ளார். நடிகர் வடிவேலுக்கு கஸ்தூரி மஞ்சள் என்ற படத்திலும்,

செல்வா திரைப்படத்தில் மணிவண்ணனுக்கும், உள்ளம் கொள்ளை போகுதே உள்ளிட்ட படங்களில் பின்னணி குரலும் கொடுத்துள்ளார் அன்பு. தற்பொழுது நடிகர் மயில்சாமியின் மகன் அன்புவின் புகைப்படம் இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது.