இவர் ரொம்ப மோசமானவரச்சே…! ‘டெர்ரர் பீஸ்’ அடுத்த “ஆதி குணசேகரன்” இவர் தான்..

சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என்று மக்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது. அந்த வகையில் சன் டிவியில் சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பாகும் சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியல் ஆனது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது.இந்த  சீரியல் ஆனது நடிகர்  மாரிமுத்துவுக்கு மிகப்பெரிய வாய்ப்புகளையும் ,திரைப்பட உலகில் ஒரு  திருப்புமுனையாகவும் அமைந்தது.

   

ஆனால் இவர் சமீபத்தில் மாரடைப்பு காரணமாக திடீரென்று காலமானார். இந்த செய்தியானது சோகத்தில் ஆழ்த்தியது. அடுத்து அந்த கேரக்டரில் அடுத்து நடிக்கவிருப்பது யார் என்கிற எதிர்பார்ப்பு சீரியல் ரசிகர்களிடம் இருந்து வந்தது. அந்தக் கேரக்டருக்காகவே பலரும் அந்த சீரியலைப் பார்த்து வந்ததால் புதிய நடிகரைத் தேர்வு செய்வதில் தயாரிப்புத் தரப்பு ரொம்பவே யோசித்ததாகச் சொல்லப்பட்டது.

சினிமா, டிவியிலிருந்து பலரது பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாக சமூக வலைதளங்களில் எழுதினார்கள். ராதாரவி, இளவரசு, ஆனந்தராஜ் தொடங்கிப் பல பெயர்களை ரசிகர்களே பரிந்துரை செய்தார்கள். ஆனால் ஆரம்பம் தொட்டே நடிகர் வேல ராமமூர்த்தியின் பெயர் பரிசீலனையில் இருந்தது. நாமும் இது தொடர்பாக அவரிடம் பேசிய போது, “கூப்பிட்டாங்க, இன்னும் முடிவு பண்ணலை” எனச் சொல்லியிருந்தார்.

இந்தப் பின்னணியில் தற்போது அவரையே இறுதி செய்து ஷூட்டிங் தொடங்கி விட்டதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த சில தினங்களில் ஆதி குணசேகரனாக வேல ராமமூர்த்தியை நீங்கள் பார்க்கலாம்.