
இயக்குனர் சீனு ராமசாமி நடிகை ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பத்திரிகையாளர் பிஸ்மி அதிரடியாக கூறியிருக்கிறார்.
பத்திரிக்கையாளராக இருக்கும் பிஸ்மியின் சில கருத்துக்கள் பல இடங்களில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த வகையில், தற்போது பிஸ்மி பேட்டி ஒன்றில் தெரிவித்ததாவது, இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் வெளிவந்த இடம் பொருள் ஏவல் என்ற திரைப்படத்தில் நடித்திருந்த நடிகை மனிஷா யாதவ் கொடைக்கானலில் நடந்த படப்பிடிப்பிற்கு சென்றிருந்தார்.
அந்த இடத்தில், வைத்து அவருக்கு சீனு ராமசாமி கடுமையாக தொல்லை கொடுத்திருக்கிறார். இதன் காரணமாக, ஒரு வாரம் கூட படப்பிடிப்பு தளத்தில் அவரால் நீடிக்க முடியவில்லை. உடனே அங்கிருந்து கிளம்பிவிட்டார். எனக்கு போன் செய்து சீனு ராமசாமி பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிவித்தார்.
அவர் எப்படியெல்லாம் தொல்லை கொடுத்தார் என்று மனிஷா யாதவ் கூறிய வாக்குமூலம் என்னிடம் உள்ளது. இயக்குனர் சீனு ராமசாமியின் மற்றொரு முகம் இதுதான். ஒரு கட்டத்தில் அவர் சினிமா துறையே வேண்டாம் என்று போய்விட்டார் என்று கூறியிருக்கிறார்.