திருமணம் பண்ணிட்டேன் ஆனா அந்த விஷயத்திற்கு மனதளவில் தயாராகவில்லை டாப்ஸி கூறிய பகீர் தகவல்..

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் 2011 ஆம் ஆண்டு வெளியான படம் ஆடுகளம் இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.  இப்படத்தில்  தனுஷ், கிஷோர்,  டாப்ஸி,  ஆடுகளம் நரேன்,  முருகதாஸ்,   சென்றாயன்,  அட்டகத்தி தினேஷ்,   போன்ற பல பிரபலங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.இப்படத்தில் கதாநாயகியாக நடித்து மக்கள் மத்தியில் இருந்து வரவேற்பு பெற்றவர் நடிகை டாப்ஸி.

   

 

இதுவே இவரின் தமிழில் முதல் திரைப்படமாகும். இவர் டெல்லியை பூர்வீகமாக கொண்டவர்.அதன் பிறகு மாடலாக தனது திரை பயணத்தை ஆரம்பித்தார். இவர் 2010ஆண்டு வெளியான ‘சும்மாண்டி நாதம்’ என்ற  தெலுங்கு திரைப்படத்தில் மூலமாக திரையுலகில் அறிமுகமானார். இவர் முனி, வலை,  வந்தான் வென்றான், மோகுடு, தராவு  போன்ற பல படங்கள்  நடித்துள்ளார்.சமீபத்தில் டாப்ஸி ஹீரோயினாக நடித்த ஷாரூக்கானின் டங்கி என்ற திரைப்படம் ரூ. 400 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.

இதற்கிடையே பேட்மின்டன் வீரர் மத்தியாஸ் போ என்பவருக்கும், டாப்ஸிக்கும் இடையே காதல் ஏற்பட்டிருந்தது.இருவரும் சமீபத்தில் தான் திருமணம் முடித்தனர். இது தொடர்பாக தெளிவற்ற புகைப்படங்கள் வெளிவந்தன.இந்நிலையில் தனது திருமணம் குறித்த புகைப்படங்களை வெளியிட மாட்டேன் என்று நடிகை டாப்ஸி கூறியுள்ளார்.அதற்காக தான் இன்னும் மனதளவில் தயாராகவில்லை என்றும் டாப்ஸி தெரிவித்திருக்கிறார்.