
இசையமைப்பாளர் இளையராஜா
இந்தியாவின் சிறந்த திரைப்பட இசையமைப்பாளர்களுள் ஒருவரான இளையராஜா இதுவரை 1000-க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். அன்னக்கிளி என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததன் மூலம் 1976 இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இவரது பாடல்களுக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது என சொல்லி தெரிய வேண்டியது இல்லை. அதிலும் அவரது பழைய ஹிட் பாடல்கள் தற்போதைய இளம் தலைமுறையினரையும் கவர்ந்த ஒன்றாக இருந்து வருகின்றன.
வாழ்க்கை வரலாற்று படம்
இந்நிலையில் இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கையை படமாக எடுக்க வேண்டும் என்பது தனது கனவு என இயக்குனர் ஆர்.பால்கி தெரிவித்து இருக்கிறார். அதில் தனுஷை தான் இளையராஜாவாக நடிக்க வைக்க போவதாகவும், தனுஷின் முகம் பார்க்க இளையராஜா முகம் போல தான் இருக்கும் என்று கூறியுள்ளார். மேலும் அந்த படம் தான் எங்கள் இருவருக்குமே மிகப்பெரிய கனவு என பால்கி சமீபத்திய பேட்டி ஒன்றில் குறிப்பிட்டு இருக்கிறார்.