பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட மணிகண்டனின் மொத்த சம்பளம் இத்தனை லட்சமா?… அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்…

பிக் பாஸ் சீசன் 6 வீட்டில் இருந்து தற்போது வெளியேறிய மணிகண்டன் வாங்கிய மொத்த சம்பளம் குறித்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி ஆனது தற்பொழுது பரபரப்பாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டுள்ளது. இந்த சீசனில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இவர்களில் வாரம் ஒருவர் என குறைந்த வாக்குகள் பெற்று பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

   

அந்த வகையில் இறுதியாக பிக் பாஸ் வீட்டை விட்டு தற்பொழுது மணிகண்டன் ராஜேஷ் வெளியேறி உள்ளார். இவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணன் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. இவர் பிக் பாஸ் வீட்டிற்குள் நடிகை ஐஸ்வர்யாவின் அண்ணன் மற்றும் சீரியல் நடிகர் என்ற அடையாளத்தோடு கலந்து கொண்டார்.

நடிகர் மணிகண்டன் ராஜேஷ் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘அவள்’ என்ற சீரியல் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இதைத் தொடர்ந்து சிவா மனசுல சக்தி, தாய் வீடு என பல சீரியல்களில் நடித்துள்ளார். மேலும் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான Mr & Mrs சின்னத்திரை நிகழ்ச்சியிலும் பங்கெடுத்து கொண்டார். இவர் பிக் பாஸ் வீட்டில் தன்னுடைய விளையாட்டை மிகவும் சிறப்பாக விளையாடிய வந்தார்.

இதனால் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பும் பெற்று இருந்தார். தற்பொழுது பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய போட்டியாளர் மணிகண்ட ராஜேஷின் மொத்த சம்பளம் குறித்து விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதாவது இவர் பிக் பாஸ் வீட்டில் இருந்த ஒரு நாளைக்கு ரூபாய் 18 முதல் 20 ஆயிரம் வரை சம்பளமாக பேசப்பட்டு உள்ளே நுழைந்ததாக கூறப்படுகிறது.

ஆனால் இந்த சம்பள விபரங்கள் எந்த அளவிற்கு உண்மை என்பது நமக்குத் தெரியவில்லை. இதை பொறுத்து பார்க்கும் பொழுது பல லட்சங்களில் சம்பளம் பெற்றுள்ளார் நடிகர் மணிகண்டன் ராஜேஷ் என்பது நமக்கு தெளிவாகிறது.