இந்த புகைப்படத்தில் இருக்கும் க்யூட் குழந்தை யார் தெரியுமா?… இன்று இவர் ஒரு பிரபல நடிகை… கண்டுபிடிச்சிட்டீங்களா…

நடிகை ஜான்வி கபூரின்  சிறுவயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

மறைந்த முன்னணி நடிகை ஸ்ரீதேவியின் மகள் என்ற அடையாளத்தோடு திரையுலகில் கால்பதித்தவர் தான் நடிகை ஜான்வி கபூர். இவர் தனது அம்மாவின் மறைவை தொடர்ந்து திரை உலகில் அறிமுகமானார். வாரிசு நடிகையாக எளிதில் திரை உலகில் கால் பதித்த இவருக்கு தற்பொழுது வரை பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.

   

முதன் முதலாக ‘தடக்’ திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். திரையுலகில் தனது அம்மாவின் இடத்தை பிடிக்க தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார். நடிகை ஜான்வி கபூர் தற்பொழுது ஒரு சில பாலிவுட் படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டு வருகிறார். இவர் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் ‘குட் லக் செர்ரி’.

இத்திரைப்படம் தமிழில் வெளியான’ கோலமாவு கோகிலா’ திரைப்படத்தின் ரீமிக்ஸ். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. நடிகை ஜான்வி கபூர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ‘எனக்கு விஜய் சேதுபதி மற்றும் ஜூனியர் என்டிஆர் போன்ற நடிகர்களுடன் நடிக்க ஆசையாக உள்ளது’ என்றும், நான் விரைவில் தென்னிந்திய படத்தில் நடிக்க போகிறேன்’ என்றும் அறிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து தென்னிந்திய ரசிகர்கள் நடிகை ஜான்வி கபூரின் வருகையை எதிர்பார்த்து ஆர்வமாக உள்ளனர். சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை ஜான்வி கபூர். இவர் அவ்வப்பொழுது தனது ஹாட்டான புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து ரசிகர்களை திணறச் செய்து வருகிறார். இந்நிலையில் நடிகை ஜான்வி கபூரின் சிறு வயது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி படுவைரலாகி வருகிறது.

இதோ அந்த கியூட் புகைப்படம்….