‘பிரண்ட்ஸ்’ பட குட்டி விஜயா இது ?… இப்ப எப்படி இருக்காரு தெரியுமா?… பார்த்தா ஷாக் ஆயிடுவிங்க… புகைப்படம் இதோ…

‘பிரண்ட்ஸ்’ திரைப்படத்தில் குட்டி விஜய் ஆக நடித்த நடிகரின் சமீபத்திய புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

2001ல் வெளிவந்து சூப்பர் ஹிட்டான திரைப்படம் ‘பிரண்ட்ஸ்’. இத்திரைப்படம் இயக்குனர் சித்திக்கின் இயக்கத்திலும், கோகுல் கிருஷ்ணாவின் வசனத்திலும், நடிகர் சூர்யா ,விஜய் முதன்மை கதாபாத்திரமாக கொண்டு வெளிவந்தது. இத்திரைப்படம் பிரண்ட்ஸ் என்ற மலையாள திரைப்படத்தை தழுவி வெளிவந்து மெகா ஹிட் அடித்தது.

   

இதன் மூலம் நடிகர் சூர்யா மற்றும் விஜய்க்கு நல்ல பேரை வாங்கிக் கொடுத்ததோடு  மட்டுமல்லாமல், இன்றுவரை காமெடியிலும் மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளது. தற்பொழுது இத்திரைப்படத்தில் நடிகர் விஜயின் சின்ன வயது கதாபாத்திரத்தில் நடித்த சிறுவனை பற்றிய தகவல்கள் தற்போது இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகிறது.

அதாவது இவருடைய உண்மையான பெயர் பரத் ஜெயந்த். இவர் 1988 சென்னையில் பிறந்தவர். இந்த படத்தில் நடிக்கும் போது படத்திற்கு 14 வயது இவர் எம் சி டி எம் சர்வதேச பள்ளியில் தான் பள்ளி படிப்பை முடித்தார் .அதன் பின்னர் லயோலா கல்லூரியில் விஷ்வல் கம்யூனிகேஷன் மற்றும் எம்பிஏ முடித்தார். இதைத் தொடர்ந்து மாடலிங் துறையில் புகுந்தார். தற்பொழுது பிரபல மாடலாக வலம் வந்து கொண்டுள்ளார்.

இவர் ‘ஃபிரண்ட்ஸ்’ படத்தை தொடர்ந்து வானத்தைப்போல மற்றும் பிரியமான தோழி போன்ற திரைப்படங்களில் நடித்தார். தற்பொழுது இவர் நடிப்புக்கு முழுக்கு  போட்டுவிட்டு படிப்பில் கவனம் செலுத்தி வருகின்றார். இவர் விக்ரமனின் இளமை நாட்கள் என்ற படத்தில் நடித்த பரத் ஜெயந்த், அதர்வா-நயன்தாரா நடித்த இமைக்கா நொடிகள் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

இந்நிலையில் நடிகர் பரத் ஜெயத்தின் சமீபத்திய புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ‘பிரண்ட்ஸ் திரைப்படத்தில் பார்த்த சிறு பையனா இவர்?’ என்று ஆச்சரியத்தோடு கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதோ அவரின் புகைப்படம்…