‘பாக்கியலட்சுமி’ சீரியலில் வரும் ராதிகா மற்றும் பாக்யவா இது?… நீங்க ரெண்டு பேரும் இவ்வளவு நெருக்கமா?… வைரலாகும் வீடியோ இதோ…

‘பாக்கியலட்சுமி’ சீரியலில் நடித்து வரும் நடிகை ரேஷ்மாவும் நடிகை சுசித்ராவும் நெருக்கமாக எடுத்துக்கொண்ட வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று ‘பாக்கியலட்சுமி’. இந்த சீரியல் குறிப்பாக அதிகமான இல்லத்தரசிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த சீரியலில் கணவனால் கைவிடப்பட்ட ஒரு பெண் தனது குடும்பத்தை எப்படி சமாளித்து வழி நடத்துகிறார் என்பதை மிகவும் அழகாக காட்டியுள்ளார் சீரியலின் இயக்குனர்.

   

தற்பொழுது இந்த சீரியலில் பல விறுவிறுப்பான திருப்பங்கள் ஏற்பட்டு மிகவும் சுவாரசியமாக சென்று கொண்டுள்ளது. இதில் தற்பொழுது கோபி தனது வீட்டை விற்கப் போவதாக கூறிவிட்டார். அந்த வீட்டில் ஒரு மாதத்திற்குள் வாங்கி விடுவதாக எழில் சவால் விட்டிருக்கின்றார். தற்பொழுது எழில் தனது கதைகளை விற்று வீட்டை வாங்குவாரா? இல்லை பாக்கியா ஏதாவது செய்கிறாரா? அல்லது கோபி ஜெயிப்பாரா என்பதை இனிவரும் எபிசோடுகளில் நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இந்நிலையில் பாக்கியலட்சுமி சீரியல் செட்டில் சுசித்ரா மற்றும் ரேஷ்மா இருவரும் இருவரும் இணைந்து இருக்கும் அழகான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது . இந்த வீடியோவை நடிகை ரேஷ்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ‘சீரியலில் மட்டும் தான் நீங்கள் எலியும், பூனையுமா? நிஜத்தில் இவ்வளவு நெருக்கமா?’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

வைரலாகும் இந்த வீடியோ இதோ….

 

View this post on Instagram

 

A post shared by Reshma Pasupuleti (@reshmapasupuleti)