நம்ம ரொமான்டிக் ஹீரோ நடிகர் சித்தார்த்தின் முதல் மனைவியா இவர்?… ஹீரோயின் போல இருக்காங்களே… புகைப்படம் உள்ளே…

தமிழ் சினிமாவில் ‘பாய்ஸ்’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் சித்தார்த். இதைத்தொடர்ந்து ஆயுத எழுத்து, எனக்குள் ஒருவன், காவியத்தலைவன் போன்ற பல திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாக திரைத்துறையில் பிரபல நடிகராக வலம் வந்து கொண்டுள்ளார் நடிகர் சித்தார்த்.

   

இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடித்துள்ளார். இவர் ஆங்கிலத்திலும் ஒரு படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் நடிகராக மட்டுமல்லாமல் கதையாசிரியர், தயாரிப்பாளர் மற்றும் பாடகர் என பன்முக திறமைகளோடு திரையுலகில் வலம் வந்து கொண்டுள்ளார்

நடிகை சமந்தாவை காதலித்து வந்த இவர் பிறகு பிரேக் அப் செய்தார். இதன் பிறகுதான் நடிகை சமந்தா நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர் அதிக நடிகைகளுடன் காதல் கிசுகிசுக்களிலும் சிக்கியுள்ளார்.

இறுதியாக இவர் தமிழில் அருவம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. தற்பொழுது இவர் கமலஹாசன் நடிப்பில் உருவாகி வரும் ‘இந்தியன்2’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

அவ்வப்பொழுது சர்ச்சைகளில் சிக்கும் இவர் திரைப்படங்களில் நடித்து பிரபலமானதை விட சர்ச்சைகளில் சிக்கி பிரபலமானதே அதிகம். அந்தவகையில் நடிகர் சித்தார்த்  நடிகை அதிதி ராவை காதலிப்பதாகசமூக வலைத்தளங்களில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நடிகர் சித்தார்த் தனது முதல் மனைவியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. இவர் 2003ல் மேக்னா என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்பொழுது இவர் தனது முதல் மனைவியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.

இதோ அந்த புகைப்படம்…