நம்ம கேப்டன் விஜயகாந்த் இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா?… வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்… கண்கலங்கிய ரசிகர்கள்…

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வளம் வந்தவர் நடிகர் விஜயகாந்த். இவர் தனது ரசிகர்களால் ‘கேப்டன்’ என அன்போடு அழைக்கப்படுகிறார். இவர் நடிப்பில் வெளிவந்த பல திரைப்படங்கள் இன்றும் நம் மனதில் இருந்து நீங்காத இடத்தை பிடித்துள்ளது.

   

இதுவரை தமிழ் சினிமாவில் 156 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார் நடிகர் விஜயகாந்த். இவருடைய இடத்தை எந்த நடிகராலும் இதுவரை முடியவில்லை.

இவர் தமிழ் சினிமாவில் செய்த சாதனைகள் ஏராளம். தமிழ் மொழியை தவிர வேறு எந்த மொழிகளிலும் நடிகர் விஜயகாந்த் நடித்தது கிடையாது.

இவர் நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவரும் ஆவார்.  நடிகராக மட்டுமின்றி ஒரு தலைசிறந்த அரசியல்வாதியாகவும் செயல்பட்டார்.

கடந்த சில வருடங்களாக உடல் நலம் சரியில்லாமல் வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்றுக் கொண்டு வருகிறார் நடிகர் விஜயகாந்த்.

சமீபத்தில் இவருக்கு நடந்த சிகிச்சை ஒன்றில் இவரின் கால் விரல்கள் அகற்றப்பட்டதும்  குறிப்பிடத்தக்கது.

கம்பீரமாக திரையில் பார்த்த நடிகர் விஜயகாந்தை, தற்பொழுது இந்த நிலையில் பார்க்கும் அவரது ரசிகர்கள் கண்கலங்கி வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் விஜயகாந்த்தை திரைபிரபலங்கள் நேரில் சென்று, அவ்வப்பொழுது சந்தித்து வருகின்றனர்.

அப்படி அவர்கள் நடிகர் விஜயகாந்த்தை சந்தித்த பொழுது எடுக்கப்பட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.