
கோலிவுட்டின் படுபிஸியான நடிகர் என்று யாரைக்கேட்டாலும் நடிகர் விஜய் சேதுபதியின் பெயரை தான் சொல்வார்கள். அந்த அளவுக்கு பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். ஹீரோ தான் என்று இல்லாமல் எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் துணிந்து நடிப்பதால் அவர் கை நிறைய படங்கள் இருக்கிறது.
இவர் தனது ரசிகர்களால் அன்போடு ‘மக்கள் செல்வன்’ என்று அழைக்கப்படுகிறார். இவர் நடிப்பில் வெளியான தென்மேற்கு பருவக்காற்று, சுந்தரபாண்டியன் போன்ற படங்களில் இவர் நடிப்பு அவ்வளவாக மக்கள் மத்தியில் அறியப்படவில்லை. ஆனால் தற்பொழுது இவர் தனது நடிப்பு திறமையால் அசுர வளர்ச்சி அடைந்துள்ளார்.
இவர் தற்பொழுது அதிகமாக வில்லன் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். எனினும் அவ்வப்போது ரொமான்டிக் ஹீரோவாகவும் அசத்தி வருகிறார். அண்மையில் இவர் நடிப்பில் வெளியான ‘மாமனிதன்’ மாஸ்டர் விக்ரம் போன்ற திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.
தற்போது இவர் ஜவான் படத்தில் நடிகர் ஷாருக்கானுக்கு வில்லனாகவும் நடித்து அசத்தி இருந்ததால் இந்த படமும் வசூல் சாதனையும் படைத்து மிகப்பெரிய பெயரை இந்தி திரையுலகிலும் விஜய் சேதுபதிக்கு பெற்றுதந்தது.
இவர் தற்போது இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் ‘ட்ரெயின்’ படத்தில் நடித்து வருகிறார். ஒரு இரவில் ரயிலில் நடக்கும் சம்பவங்களை மையமாக கொண்டு இந்த படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளதாகவும், விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை டிம்பிள் ஹயாதி நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தப்படத்தில் தன்னுடைய உடல் எடையை குறைக்க பிட்னஸ்சில் இறங்கியுள்ள விஜய் சேதுபதி, இந்தப் படத்தில் பிட்னெஸ் மேனாக வலம்வருவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.