இயக்குனர் அட்லி இதை பார்த்து தான் படம் எடுக்காரா… அவரே வெளியிட்ட ரகசியம்… வைரல் நியூஸ்…!!

இயக்குனர் அட்லி

இயக்குனர் ஷங்கரிடம், நண்பன் மற்றும் எந்திரன் ஆகிய இரு படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் இயக்குனர் அட்லி. பின் இவர் “ராஜா ராணி” திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். மேலும் இவர் தெறி, மெர்சல், பிகில் தற்போது ஜவான் என மொத்தம் இதுவரை 5 திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். இவையனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று, வசூல் ரீதியாகவும் சாதனைப் படங்களாக உள்ளது.

   

இந்நிலையில் பல்வேறு படங்களில் ஹிட்டான காட்சிகளை எடுத்து அதற்கு ஒரு திரை கதையை அமைத்து படத்தை எடுப்பதாக இவர் மீது குற்றச்சாட்டு இருந்து வருகின்றது.

அதற்கு அவர் வேறு என்ன காட்ட முடியும் நாம் எதை எடுத்தாலும் அதை ஏற்கனவே வேற யாராவது எடுத்து வைத்திருப்பார்கள் மற்றும் இசை என்றால் ஏழு ராகம் தான். எனவே அதையும் தாண்டி எதையும் செய்ய முடியாது. அதேபோல்  சினிமாவுக்கு என்று சில வரம்புகள் இருக்கிறது என்பதால், அதையும் தாண்டி நம்மால் எதுவும் செய்ய முடியாது. இவ்வாறு அட்லீ கூறினார்.

மேலும் அண்மையில் பேட்டி ஒன்றில் பேசிய அட் லி, ஆம் நான் நிறைய படங்களை பார்த்து தான் சினிமாவை கற்றுக் கொண்டேன் என்றும் நான் ஒரு படத்தை எடுக்க 4 படங்களின் உதவி எனக்கு தேவைப்படுகிறது என்றார். இவரின் இந்த பேட்டி  ரசிகர்கள் மத்தியில் பல விமர்சனங்களாக பேசப்பட்டு வருகிறது.