படம் மீதான நம்பிக்கை போச்சு!. இனி மகள் பேச்சை கேட்க மாட்டேன்… இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் பேச்சு..!!

ஜெயிலர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10 அன்று வெளியாக உள்ள நிலையில், இப்படத்தில் மோகன்லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷ்ராஃப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் என முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளனர்.

அரசியல் களத்தில் ரஜினி : தலைவா வா... தலைமை ஏற்க வா என ரசிகர்கள் அழைப்பு | Rajini in politics fans invite

   

சமீபத்தில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் மிகவும் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்ற போது, நடிகர் ரஜினிகாந்த், நீண்ட இடைவெளிக்குப் பின், ரசிகர்கள் முன் தோன்றி பலவற்றை குறித்து பேசியுள்ளார்.

ஆலோசனை கேட்க மாட்டேன்

இந்நிலையில் ஜெயிலர் படத்தின் இசை வெளியிட்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த், எந்திரன் படத்தை அடுத்து எனக்கு உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தேன். பின் நீண்ட இடைவெளிக்குப் பிறகு  படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை வந்தது. இதனையடுத்து என் மகள் அதிபுத்திசாலி என்றும் அவர் என்னிடம் அனிமேஷன் படத்தில் நடிக்கலாம் என்றும் ஆலோசனை கொடுத்ததன் பேரில் நானும் நடித்தேன். மேலும் அந்த காலகட்டத்தில் தொழில்நுட்பம் பெரிய அளவில் இல்லை மற்றும்  படத்தில் தரம் நன்றாக இருக்கும் வேண்டும் என்றால் அதிக அளவு பணமும் செலவாகும் என்று சொன்னார்கள்.

Jailer Audio Launch: Full Rajinikanth Speech in English Tamil Movie, Music Reviews and News

Rajinikanth Daughter's Requests: "ப்ளீஸ்..ப்பா.. வேணாம்".. மகள்கள் வைத்த உருக்கமான கோரிக்கை.. கேட்பாரா ரஜினிகாந்த்? | Rajinikanth daughters two requests Ahead of Party Announcement - Tamil ...

Kochadaiiyaan (Tamil) Full Movie | Rajinikanth | Deepika Padukone | Aadhi | Nassar | Shobana - YouTube

 

அந்த வகையில் எனக்கு கோச்சடையான் படம் மீது நம்பிக்கை இல்லை என்பதால் எடுத்த வரை போதும் அப்படியே ரிலீஸ் பண்ணுங்க என்று சொன்னேன். பின்னர் நான் நினைத்த படியே படம் சரியாக போகவில்லை. அப்போதுதான் எனக்கு ஒன்று புரிந்தது. எப்போதும் அதிபுத்திசாலி பேச்சை கேட்க கூடாதது மற்றும்  அவர்களுடன் பழக கூடாது. இவ்வாறு ரஜினிகாந்த் அந்த இசை வெளியிட்டு விழாவில் பேசியுள்ளார். தற்போது இவரின் இந்த பேச்சு சமூக வளைதளத்தில் வைரலாகி வருகிறது.