
திரை துறையில் உச்ச நட்சத்திரங்களின் பிள்ளைகளும் நடிக்க வருவது காலம் காலமாக நடந்துகொண்டு தான் இருக்கிறது. நடிப்பு இல்லையெனில் திரைத்துறையை சேர்ந்த ஏதேனும் ஒரு தொழிலை கையில் எடுத்துவிடுவார்கள். மூன்று தலைமுறைகாக நடித்துக் கொண்டிருக்கும் பல நடிகர்கள் நடிகைகள் இருக்கிறார்கள்.
அந்த வரிசையில் தற்போது இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர், அவரின் மகனான தளபதி விஜய் தென்னிந்திய திரையுலகையே கட்டுக்குள் வைத்திருக்கிறார். தற்போது அவருடைய மகன் ஜேசன் சஞ்சய், லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் ஒரு திரைப்படத்தை இயக்க உள்ளதாக முன்பே அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியாகியிருந்தது.
எனினும், அதன் பிறகு அத்திரைப்படம் குறித்து எந்த தகவலும் வெளிவரவில்லை. இது குறித்து வலைப்பேச்சு அந்தணன் தன் பேட்டி ஒன்றில் தெரிவித்திருப்பதாவது, ஜேசன் விஜய்க்கு தமிழ் தெரியவில்லை. அவர் ஆங்கிலத்தில் கதையை எழுத, அதனை தமிழுக்கு மாற்றி மற்றவர்களுக்கு கூறுவதற்கென்றே ஒருவரை வைத்திருக்கிறார்கள்.
இதனால் தான் அந்த திரைப்படத்தின் பணிகள் தாமதமாக நடந்து கொண்டிருக்கிறது. மொழி தான் அங்கு முக்கிய பிரச்சினையாக இருக்கிறது. மேலும், ஜேசன் சஞ்சய் தற்போது உடனே படத்தை முடித்து விட வேண்டும் என்று குறிக்கோளில் இல்லை. தாமதமாக எடுக்கலாம் என்று தான் முடிவு எடுத்திருக்கிறார் என தெரிவித்துள்ளார்.